News April 9, 2024
விருதுநகர் அருகே விபத்து; சிறுவனின் நிலை?

விருதுநகர் அருகே முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது 5 வயது மகன் நேற்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே ஊரைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து சிறுவன் மீது மோதியுள்ளார். இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News March 4, 2026
விருதுநகர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

வெம்பக்கோட்டை அருகே மஞ்சலோடைப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (24). இவர் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகள் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 4, 2026
கே.டி.ஆர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
News March 4, 2026
JUST IN விருதுநகர்: முன்னாள் திமுக எம்.பி விடுதலை

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடியதாக சேத்தூர் போலீஸார் டிராக்டர் ஓட்டுநர் முருகன், தென்காசி திமுக முன்னாள் எம்.பி தனுஷ்குமார் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவியில் உள்ள ஜே.எம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் இருவரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.


