News May 12, 2024
விருதுநகர் அருகே விபத்து; மரணம்

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (45). இவர் அந்த பகுதியில் மைக்செட் போடும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி இரவு சிவகாசி – சாத்தூர் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதி பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 28, 2025
சிவகாசியில் வீடு புகுந்து ஜெயின் பறிப்பு

சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் மாலா பிரியதர்ஷினி(44). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார், மாலா பிரியதர்ஷினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த அரைப்பவுன் தங்கதாலி, 2 பவுன் வளையலை பறித்து சென்றார். அஜித்குமார் அவரது மனைவி ஐஸ்வர்யா மீது வழக்குப்பதியப்பட்டது.
News December 28, 2025
விருதுநகர்: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 28, 2025
விருதுநகர்: குடிநீர் வேன் மோதி பூஜாரி பலி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி இருஞ்சிறையை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் 77. பூஜாரியான இவர் அங்குள்ள சிவன் கோயிலில் பூஜை முடித்துவிட்டு ரோட்டோரம் நடந்து சென்றார்.அப்போது குடிநீர் சப்ளை செய்ய வந்த மினி வேன் பின்னோக்கி வந்த போது பூஜாரி மீது மோதி பலியானார். கட்டனூர் போலீசார் டிரைவர் கார்த்திகைசாமியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


