News April 21, 2024
விருதுநகர் அருகே பெண் மீது தாக்குதல்

அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் பூமிநாதன் என்பவர் வந்து மனைவி நாச்சி (46). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் தங்கப்பாண்டி என்பவருக்கும் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் தங்கப்பாண்டி குடும்பத்தார் ஐந்து பேர் சேர்ந்து நாச்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. டவுன் போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 12, 2026
BREAKING விருதுநகர்: பட்டாசு ஆலையில் தீ விபத்து

வெம்பக்கோட்டை அருகே தெற்கு ஆணைக்குட்டம் பகுதியில் ஐயப்பா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பட்டாசு கழிவுகளை கொளுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சத்யாநகரை சேர்ந்த யேசுராஜ் (34) என்ற தொழிலாளி படுகாயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை.
News February 12, 2026
விருதுநகர்: இனி எல்லா ஆதார் சேவையும் இங்கே!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 12, 2026
சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை

சிவகாசி ராஜதுரை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(45). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் யுவஸ்ரீ (18). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்வில் யுவஸ்ரீ குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதை ராதாகிருஷ்ணன் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி யுவஸ்ரீ வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.


