News December 28, 2025
விருதுநகர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டில் முனியாண்டி கோவில் பின்புறம் மலை அடிவாரத்தில் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.இங்கு நேற்று காலை 6:30 மணிக்கு வனகாப்பாளர் ஆனந்தி குழுவினர் ரோந்து செல்லும் போது 7 இடங்களில், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து போலீசாருக்கு தெரிவித்தனர்.
Similar News
News February 10, 2026
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE
News February 10, 2026
சிவகாசி: பஸ் மோதி ஒருவர் பலி!

சிவகாசி, திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சேர்ந்த நடராஜன்(45). சம்பவத்தன்று அவர் டூவீலரில் எரிச்சநத்தம் – சிவகாசி மெயின் ரோட்டில் சென்றபோது, காளையார்குறிச்சி அருகே வந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பள்ளி பஸ் டிரைவர் காட்டுராஜா(53) மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
விருதுநகர்: அரசு வேலை எனக் கூறி ரூ.80 இலட்சம் மோசடி!

மல்லாங்கிணர் அருகே ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த தங்ககுமார், மாவட்ட காசநோய் தடுப்புத் திட்ட ஒப்பந்த பணியாளர். அவரது சகோதரர் செந்தில்குமார் (48), நண்பர் விஜயகுமார் (41) ஆகியோர் சாத்தூரைச் சேர்ந்த திமுக நிர்வாகி முருகனிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் பெற்றனர். இதுபோல் மேலும் 3 பேரிடமும் ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்தனர். புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


