News April 8, 2024

விருதுநகர் அருகே தீ விபத்து

image

பந்தல்குடியை சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியசாமி. இந்நிலையில் பீட்டர் ஆரோக்கியசாமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றபோது, திடீரென அவரது வீட்டில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத் துறை விரைந்து வந்து தீயை அணைத்தனர்.‌ தீ விபத்தில் வீட்டிலிருந்த மின் சாதன‌ பொருட்கள் ஆவணங்கள் எரிந்து நாசம் ஆகியது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.

Similar News

News July 7, 2025

ராஜபாளையம்: பரியாணி கடை வைக்க ரூ.25 கோடி மோசடி

image

ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்த கங்காதரன் என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு பிரபல மரக்கார் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு கிளை திறக்க உள்ளதாக கவர்ச்சியாக விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பண்டிச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேரிடம் ரூ.25 கோடி வரை மோசடி செய்தார். இதில் கங்காதரனை இன்று விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

News July 7, 2025

விருதுநகரில் ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம்.

News July 7, 2025

சிவகாசி வெடி விபத்தில் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

image

கீழதாயில்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம், லேசாக காயமடைந்தவருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!