News March 27, 2024
விருதுநகர் அருகே செல்பி பாயிண்ட் திறப்பு

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று (27.3.24) 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு இந்த செல்பி பாயிண்ட் திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு பிரசுரங்களையும் தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
Similar News
News December 23, 2025
விருதுநகர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News December 23, 2025
சிவகாசியில் கட்டட தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளியான இவருக்கும் சிவகாசி மீனம்பட்டியை சாந்திக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மீனம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்ற அஜித்குமார் திடீரென அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 23, 2025
விருதுநகர் அருகே முதியவரை கட்டையால் அடித்து கொலை!

ஆலங்குளம் அருகே நரிக்குளத்தை சேர்ந்தவர் முதியவர் ராஜா(65). இவர் நரிக்குளம் விநாயகர் கோவிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டி (43) அங்கு வந்துள்ளார். அப்போது முத்துப்பாண்டி திடீரென முதியவர் ராஜாவை மிதித்து கட்டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த முதியவர் ராஜாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். கொலை செய்த முத்துபாண்டி கைதானார்.


