News August 31, 2024
விருதுநகர் அருகே காதல் ஜோடியை கொல்ல முயற்சி

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பழனிச்சாமி உயர் சாதியை சேர்ந்த கிருஷ்ணவேணியை காதலித்து கடந்த மாதம் பெண்ணின் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் வீட்டார் இருவரையும் காரில் கடத்திச்சென்று கொலை செய்ய முயற்சித்தனர். இதையறிந்த போலீசார் திரைப்பட பாணியில் விரட்டி சென்று இளம் தம்பதியை மீட்டு பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
Similar News
News October 19, 2025
விருதுநகர்: ஊராட்சி செயலர் பணி., தேர்வு இல்லை

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
விருதுநகர்: கனமழை – PETROL BUNK-ல் நிகழ்ந்த சம்பவம்

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று அக்.19 அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து கார் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News October 19, 2025
விருதுநகரில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

விருதுநகர் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.