News January 12, 2026

விருதுநகர்: அரசு பேருந்து விபத்தில் ஒருவர் பலி

image

விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி(54). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழகாபுரி முக்கு ரோட்டில் சென்றபோது ராஜபாளையம் சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Similar News

News February 12, 2026

BREAKING விருதுநகர்: பட்டாசு ஆலையில் தீ விபத்து

image

வெம்பக்கோட்டை அருகே தெற்கு ஆணைக்குட்டம் பகுதியில் ஐயப்பா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பட்டாசு கழிவுகளை கொளுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சத்யாநகரை சேர்ந்த யேசுராஜ் (34) என்ற தொழிலாளி படுகாயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை.

News February 12, 2026

விருதுநகர்: இனி எல்லா ஆதார் சேவையும் இங்கே!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை

image

சிவகாசி ராஜதுரை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(45). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் யுவஸ்ரீ (18). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்வில் யுவஸ்ரீ குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதை ராதாகிருஷ்ணன் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி யுவஸ்ரீ வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

error: Content is protected !!