News December 12, 2024

விருதுநகர் அமைச்சர் சென்ற விமானம் வானில் வட்டமடித்தது

image

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மதுரையிலிருந்து சென்னை வந்த Indigo 7593 விமானம் மீனம்பாக்கத்தில் மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து பின்னர் விமானம் தரை இறங்கியது. மேலும், சென்னையில் பெய்துவரும் கனமழைக் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

ஏங்க.. கூமாபட்டி அணைக்கு ரூ.10 கோடிங்க…

image

கூமாபட்டி அருகே வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் அணைப் பகுதியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

News August 28, 2025

விருதுநகர்: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

image

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்தோ (அ) விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து தொழிலாளர்கள் நலன் காத்திட உதவுங்கள்.

News August 28, 2025

விருதுநகரில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

image

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 36 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் http://vnrdrb.net என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். ரூ‌.12,200 முதல் 54,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!