News September 28, 2025

விருதுநகர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

image

மூவரைவென்றான் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து. இவர் லட்சுமியாபுரம் டோல்கேட்டில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்டிடங்களை சுற்றி வந்த போது 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. உடனடியாக நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் ஆண் பிரதேத்தை மீட்டு இறந்தது யார் என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

விருதுநகர்: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

image

விருதுநகர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

News February 4, 2026

சிவகாசி: அரசு பள்ளி ஆசிரியரை வெட்ட முயன்ற கும்பல்

image

சிவகாசி அருகே விஸ்வநத்தம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன் (39). இவர் தனது நண்பர் மாரிமுத்து மற்றும் இடத்தரகர்களுடன் நிலவிற்பனை குறித்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பழையவெள்ளையாபுரத்தை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சிலர் கிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2026

விருதுநகர்: ரூ.29,380 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

image

இந்தியா முழுவதும் இந்திய தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது டாக் சேவக் பிரிவில் 2019 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.12,000 – ரூ.29,380 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!