News April 2, 2024

விருதுநகர்:ராதிகாவிற்கு ஆதரவு திரட்டும் டிடிவி!

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அக்கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (02.04.2024) மாலை விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சித்துராஜபுரம், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராதிகா சரத்குமார் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Similar News

News January 31, 2026

விருதுநகர்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

விருதுநகர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

விருதுநகர் அருகே கஞ்சா வழக்கில் சிக்கிய 17 வயது சிறுவன்

image

ஸ்ரீவி.நகர் காவல் நிலைய எஸ்.ஐ மாணிக்கம் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்த போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், சிறுவனை கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

News January 30, 2026

ஆட்சியர் தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜன.30) மாவட்ட அளவிலான ஓய்வூதிய தாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் ஏழு மனுக்கள் தரப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்தார்.

error: Content is protected !!