News April 6, 2024
விருதுநகர்:பதற்றமான வாக்குச்சாவடி வெளியீடு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 314 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி கூட மிகவும் பதற்றமானது இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
ராஜபாளையம்: கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

ராஜபாளையம் அம்பலபுளிபஜார் தெருவில் வசிப்பவர் சூரிய பிரகாஷ். இவர் தனது உறவினர் சத்தீஸ்வரனுடன் புளியங்குளம் கண்மாய் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது சூரிய பிரகாஷ் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் கிணற்றில் இருந்து சூரியபிரகாஷ் உடலை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News February 4, 2026
சிவகாசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் இடையூறாக இருந்த மின் கம்பங்களை அகற்றி மாற்றி அமைக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடந்து வருகிறது. இப்பணியில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாறைப்பட்டியை சேர்ந்த முருகன்(35) ஈடுபட்டிருந்தார். அதில்ல் மின்கம்பத்தில் ஏறி பணி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 4, 2026
விருதுநகர்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ரூ.48,480 வழங்கப்படும். விண்ணபிக்க இங்கே <


