News October 16, 2025
விருதுநகர்:பட்டாசு தொழிலாளி பலி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை முத்துச்சாமிபுரம் சேர்ந்தவர் காளிமுத்து, 26. பட்டாசு ஆலை தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 8:00மணிக்கு எதிர்கோட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார்.எதிரில் சிவகாசியை சேர்ந்த காசிராஜன், 23 .ஒட்டி வந்த லோடு ஆட்டோ அவர் மீது மோதியது.சம்பவ இடத்தில் அவர் பலியானார்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 16, 2025
விருதுநகர்: ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோணுகாலில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு நடந்த ஆட்டுச்சந்தையில் ரூபாய் 3 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். நல்ல விலை போனதால் வியாபாரிகளும், ஆட்டின் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News October 16, 2025
விருதுநகர்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 16, 2025
விருதுநகர்: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <