News August 14, 2025
விருதுநகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் நாளை காலை 9.05 மணிக்கு 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆட்சியர் சுகபுத்ரா தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை, சிறப்பாக பணியாற்றி அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்க உள்ளார். நாளைய விழாவில் சான்றிதழ் பெரும் அரசு அதிகாரிகளின் விவரங்களை <
Similar News
News August 14, 2025
சிவகாசியில் மீண்டும் ஒரு கொலையா?

திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் அருகே புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை நாய் கடித்து இழுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலம் முகம் சிதைக்கப்பட்டும் இடது கையில் ட்ராகன் என பச்சை குத்தப்பட்டும் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இளைஞர் கொலை செய்யப்பட்டு கண்மாய் அருகே புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை.
News August 14, 2025
விருதுநகர்: 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15 (நாளை) விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, 100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
விருதுநகர் மக்களே… இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.