News July 28, 2024
விருதுநகரில் 60 ஆண்டுகளாக எட்டப்படாத தீர்வு

தமிழகத்தின் மேற்கு எல்லையில் செண்பகவல்லி அணை அமைந்துள்ளது. இதனால் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 10,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 1967 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 30 மீட்டருக்கு அனையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய கேரள அரசுடன் தமிழக அரசு பேசி வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சரிசெய்யப்படாததால் இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Similar News
News March 9, 2026
விருதுநகர்: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

விருதுநகர் மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News March 9, 2026
விருதுநகர்: குறுக்கே வந்த நாய்.. பறிபோன உயிர்

காரியாபட்டி அருகே கழுவனச்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கந்தன் (45). இவர் மந்திரி ஓடையில் இருந்து காரியாபட்டி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கையில் நாய் சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த கந்தன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
News March 9, 2026
சிவகாசி: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் திருமலை திருப்பதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (52). இவர் சிவகாசி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.16 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


