News January 25, 2025

விருதுநகரில் 35,416 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை 35,416 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயன்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% அதிகமாகும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கடந்த வருடம் மட்டும் 8,259 நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். தாய்மார்கள் பிரசவம் 7463,இருதய நோயாளிகள்  2133 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளனர்.

Similar News

News October 27, 2025

விருதுநகர்: 12th முடித்தால் அரசு பள்ளியில் வேலை., நாளை கடைசி

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. நாளை கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 27, 2025

விருதுநகர்: போஸ்ட் ஆபிஸ் வங்கி வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 27, 2025

விருதுநகரில் நாளை மின் தடை

image

விருதுநகர் மக்களே, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, மல்லிபுதூர், ஆலங்குலம், சுப்பையாபுரம், கங்கரக்கோட்டை, செவல்பட்டி, வெம்பக்கோட்டை, பெரியவள்ளிக்குளம், GN பட்டி, துலுக்கப்பட்டி, அருப்புக்கோட்டை, பெரியபுளியம்பட்டி, பாளையம்பட்டி, வேலாயுதபுரம், பந்தல்குடி ஆகிய மின் நிலையங்களில் நாளை (அக். 28) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மேலும் அறிய <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE IT.

error: Content is protected !!