News November 10, 2024
விருதுநகரில் 138 தரை பாலங்கள் அமைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 2,033 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பராமரிக்கப்பட்டும், கடந்த 3 ஆண்டுகளில் 247 கிலோமீட்டர் சாலைகள் ரூ.261 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.314 கோடி மதிப்பில் 138 தரைப்பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
விருதுநகர்: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

விருதுநகர் மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <
News October 24, 2025
ஸ்ரீவி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு சிறை

அருப்புக்கோட்டை பகுடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியின் தந்தை மற்றும் குற்றத்தை மறைத்ததாக தாயையும் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.தாய் விடுவிப்பு.
News October 24, 2025
சிவகாசியில் 2 நாளில் 140 டன் குப்பைகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் கடந்த 2 நாட்களில் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


