News August 11, 2025

விருதுநகரில் வேலை வாய்ப்பு முகாம்

image

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஆக.14 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம்.

Similar News

News August 11, 2025

விருதுநகரில் ஆக.14ல் வேலை வாய்ப்பு முகாம்!

image

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <>இங்கே க்ளிக்<<>> செய்து உங்களது விவரங்களை பதிவு செய்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News August 10, 2025

விருதுநகரில் இனி குண்டாஸ் பாயும் என எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

பட்டாசு விபத்து எதிரோலியால் போலீசார் அதிரடி நடவடிக்கை

image

விருதுநகர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கல் மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக மாவட்டம் முழுவதும் சட்டவிரோத பட்டாசு குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!