News October 31, 2025

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் நவ.11 அன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

புதிய ரவுண்டானவால் கனரக வாகனங்களுக்கு சிக்கல்

image

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் Gh நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 1, 2025

பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

image

மகளிர் சுய உதவிக் குழுவில் 2 வருடங்கள் உறுப்பினராக உள்ளவர்கள், வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற 18- 55 வயதுடைய அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் மூலம் 2% வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதிவாய்ந்த பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் நவ.4 முதல் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

விருதுநகர்: கிராமப்புற வங்கியில் வேலை! APPLY NOW

image

விருதுநகர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ. 15க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை. இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவல். உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!