News October 19, 2024
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (அக்.18) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News July 10, 2025
உயர் கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியியல் சேர்ப்பது தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் வெள்ளி (11.07.25) அன்று நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
விருதுநகர்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், வெடி பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைத்தும், பட்டாசு ஆலைகளை 10 நாள்களுக்குள் ஆய்வு செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
News July 9, 2025
எட்டூர்வட்டம் சுங்கச்சாவடியில் அரசு பஸ் செல்லத் தடை

தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் வரும் 10ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.