News October 6, 2025

விருதுநகரில் யோகா பயிற்றுநர் பதவி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு யோகா பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், தகவலை அறிந்து கொள்ள 04562-225947 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 10, 2025

விருதுநகர்: குழந்தைகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 10, 2025

JUST IN சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

image

தீபாவளி பண்டிகையின் போது பல ஆண்டுகளாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களுக்கு டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

News October 10, 2025

BREAKING ஸ்ரீவி: கே.டி.ஆர். வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி ஆஜராகவில்லை. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், வழக்கு விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

error: Content is protected !!