News March 16, 2025
விருதுநகரில் மேடை நாடகம் தேதி மாற்றம்

கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் “தண்ணீர் தண்ணீர்” என்ற நாடகமும், தாரிணி கோமலின் “திரெளபதி” என்ற பிரம்மாண்ட மேடை நாடகம் மார்ச்.15,16 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தினால், ஏப்.12,13 அன்று இந்த நாடகக் குழுவினரால் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மேடை நாடகம் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Similar News
News October 31, 2025
மேம்பாலம் திறப்பு விழா குறித்து எம்.எல்.ஏ அறிவிப்பு

சிவகாசியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து எம்எல்ஏ அசோகன்  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேம்பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதுடன் பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் தனியார் பங்களிப்புடன் மின் விளக்குகள், நீரூற்று பொருத்தப்பட உள்ளது.
பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
News October 30, 2025
விருதுநகரில் இலவச முழுமாதிரி தேர்வுகள்

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் – 3644 பணிக்காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு இலவச முழுமாதிரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நவ.01 அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


