News March 9, 2025
விருதுநகரில் மாணவர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாரிமுத்து. இவர் விருதுநகர் அடுத்த சூலக்கரையில் ஐடிஐ படித்து வந்தார்.சரியாக படிக்காமல் மது அருந்தி வந்தவரை பெற்றோர் கண்டித்தனர்.இநநிலையில் மாரிமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
விருதுநகரில் வாடகை வீட்டில் இருப்பவரா நீங்க?

விருதுநகர் மக்களே… வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க நண்பர்களே…
News August 24, 2025
விருதுநகரில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்..!

விருதுநகர்: சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, அமைப்புசாரா டிரைவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் திருநங்கைகள் சொந்தமாக ஆட்டோ வாங்க நலவாரியத்தின் மூலம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே க்ளிக் செய்து விண்ணப்பித்து சொந்தமாக புதிய ஆட்டோவை உடனே வாங்குங்கள்.. உங்க whatsapp குரூப்ல #SHARE பண்ணுங்க.
News August 23, 2025
விருதுநகரில் ரூ.5.62 லட்சம் மதிப்புள்ள கந்தகம் பறிமுதல்

பட்டம்புதூர் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் தடையில்லா சான்று பெறாமல் 16 டன் கந்தகம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து லாரி ஓட்டுனரிடம் விசாரித்த போது அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. ரூ.5.62 லட்சம் மதிப்புடைய கந்தகத்தை தடையில்லா சான்று பெறாமல் கொண்டு வந்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.