News April 13, 2025
விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. SHARE பண்ணுங்க.
Similar News
News April 15, 2025
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.
News April 15, 2025
விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஷிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவம் தேவையில்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News April 14, 2025
சிவகாசி மேயரின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு

திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பட்டியல் இன்று (பிப்.14) வெளியாகியது. இதில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாவின் மகன் பிர்லா இன்பம் சிவகாசி மாநகர திமுக இளைஞர் அணி 5ஆம் பகுதி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்வான பிர்லா இன்பம் நிதி அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசுவிடம் வாழ்த்து பெற்றார்.