News October 23, 2025

விருதுநகரில் பேருந்தை ஓட்டிச் சென்ற போலீஸ்

image

அருப்புக்கோட்டை – விருதுநகர் நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று(அக்.22) காலை தனியார் பேருந்து சென்றது. ஆர்.எஸ்.நகர் அருகே வந்த போது டிரைவர் திடீரென பிரேக் அடித்ததால் பெண் பயணி கீழே விழுந்து காயமடைந்தார். இவர் இறந்து விட்டதாக நினைத்த டிரைவர் தப்பிச்சென்ற நிலையில் கிழக்கு போலீசார் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீசார் பஸ்ஸை ஓட்டி சென்று பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டனர்.

Similar News

News October 24, 2025

சிவகாசியில் 140 டன் குப்பைகள் அகற்றம்

image

சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் கடந்த 2 நாட்களில் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 23, 2025

விருதுநகர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.

1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

News October 23, 2025

விருதுநகர்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 90131-51515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!