News December 19, 2025
விருதுநகரில் பள்ளி மாணவர் தற்கொலை

விருதுநகர் RS நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரின் மகன் விஸ்வ பாண்டி 15. இவர் 10th படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதில் மன வருத்தமடைந்து நேற்று வீட்டின் கபோர்டு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும் சத்தம் வராமல் இருக்க வாயில் செல்லோ டேப் ஒட்டியும், இரு கால்களையும் கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 23, 2025
விருதுநகர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News December 23, 2025
சிவகாசியில் கட்டட தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளியான இவருக்கும் சிவகாசி மீனம்பட்டியை சாந்திக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மீனம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்ற அஜித்குமார் திடீரென அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 23, 2025
விருதுநகர் அருகே முதியவரை கட்டையால் அடித்து கொலை!

ஆலங்குளம் அருகே நரிக்குளத்தை சேர்ந்தவர் முதியவர் ராஜா(65). இவர் நரிக்குளம் விநாயகர் கோவிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டி (43) அங்கு வந்துள்ளார். அப்போது முத்துப்பாண்டி திடீரென முதியவர் ராஜாவை மிதித்து கட்டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த முதியவர் ராஜாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். கொலை செய்த முத்துபாண்டி கைதானார்.


