News December 26, 2025
விருதுநகரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், கூமாபட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட 21 இடங்களில் நடைபெற உள்ளது. எனவே பணியில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) முருகன் தகவல்.
Similar News
News December 31, 2025
காரியாபட்டி: பருத்திவீரன் திரைப்பட பாட்டி காலமானார்

கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் ஊரோரம் புளியமரம் எனும் பாடல் மூலம் பிரபலமானவர் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75). விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், வயது மூப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் இன்று தனது சொந்த ஊரில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
News December 31, 2025
விருதுநகர்: விபத்தில் சிக்கி கவுன்சிலர் பரிதாப பலி

சாத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக தெய்வானை (55) இருந்து வந்தார். இவர் நேற்று டூவீலரில் தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை பள்ளத்தில் டூவீலர் தடுமாறியதில் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 31, 2025
தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தென் மண்டல அளவிலான தீயணைப்பு துறை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் குழுவாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். ஏனி பயிற்சி, கயிறு ஏறுதல், நீச்சல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் பெற்றனர்.


