News December 26, 2025

விருதுநகரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

image

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், கூமாபட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட 21 இடங்களில் நடைபெற உள்ளது. எனவே பணியில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) முருகன் தகவல்.

Similar News

News December 30, 2025

விருதுநகர்: கார் மோதி விபத்து… நூலிழையில் தப்பிய பயணிகள்

image

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு காரில் கேரளாவில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையம்-தென்காசி நெடுஞ்சாலையில் ஒரு மின்கம்பத்தில் ஏதிர்பாரத விதமாக கார்மோதியது. இதில் காரில் இருந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.போலீசார் விசாரணை

News December 30, 2025

விருதுநகர்: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <>விண்ணப்ப படிவத்தை <<>>நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 30, 2025

விருதுநகர் அருகே உடல் நசுங்கி பெண் பலி

image

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவரின் மனைவி பொன்னுத்தாய். இவர் அருப்புக்கோட்டை காந்தி நகர், பிள்ளையார் கோயில் அருகில் இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!