News November 24, 2024

விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*

Similar News

News July 6, 2025

BREAKING சாத்தூர் வெடி விபத்தில் போர்மேன் கைது

image

சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கீழதாயில்பட்டியில் செயல்படும் ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர்மேன் லோகநாதனை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 6, 2025

BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

image

சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் செயல்பட்டு ஷிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் சற்றுமுன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 10 கிமீ தொலைவிற்கு தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.

News July 6, 2025

சிவகாசி: சீல் வைத்த ஆலையில் பட்டாசு உற்பத்தி

image

வெம்பக்கோட்டை கங்கரக்கோட்டையை சேர்ந்த பால்பாண்டியனுக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சில மாதங்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டது. சீல் வைத்த இந்த ஆலையில் வி.ஏ.ஓ. கலைச்செல்வி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வேங்கையன் என்பவர் பேன்சி ரக பட்டாசு தயாரித்தது தெரியவர அவரை கைது செய்து பட்டாசு, மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!