News August 9, 2024

விருதுநகரில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

2024 – 2025 ஆம் கல்வியாண்டு நாள்காட்டியில் ஆகஸ்ட் மாதத்தின் 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமை பள்ளி வேளை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 பள்ளி வேளை நாட்களையும் பள்ளி கல்வித்துறை ரத்து செய்து அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

Similar News

News November 8, 2025

விருதுநகர்: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

image

விருதுநகரில் குரூப்-II/IIA முதன்மைத்தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நவ.10 முதல் நடைபெற உள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் https://forms.gle/xzgDJcXbC6zQw6H98 மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

பயிர்காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 – ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2025-26 ராபிபருவத்தில், வேளாண் பயிர்களுக்கு உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமினை மாற்றத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!