News October 8, 2024
விருதுநகரில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமா?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.08) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய வழி (www.tnesevai.tn.gov.in) வாயிலாக வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
ஆண்டாள் கோயிலில் ஒன்றாக காட்சியளித்த தெய்வங்கள்

ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு 3 முறை அதாவது தீபாவளி பண்டிகை, கௌசிக ஏகாதசி மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ஆழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள்,ரங்கமன்னார் கருடாழ்வார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் ஒன்று சேர்ந்து காட்சியளித்தனர்.
News October 20, 2025
விருதுநகர் மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

விருதுநகர் மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: அருப்புக்கோட்டை:04566-240101, ராஜபாளையம்:04563-220101, சாத்தூர்:04562-264101, சிவகாசி: 04562-220101, ஸ்ரீவி.,: 04563-265101, விருதுநகர்:04562-240101 இங்கு <
News October 20, 2025
விருதுநகர்: மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயற்சி

விருதுநகர் டிசிகே பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரின் கடைக்கு நேற்று காலை வந்த பட்டு ராஜா அரை பவுனில் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார். வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர்.