News April 24, 2024

விருதுநகரில் டாஸ்மாக் மூடல்!

image

மே 1ஆம் தேதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாள், தொழிலாளர் தினம், பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள், எட்டு மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டார்.

Similar News

News January 3, 2026

விருதுநகர் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

விருதுநகர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

விருதுநகர்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

விருதுநகர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் வருவாய் கோட்டங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் வருவாய் கோட்டங்களான சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் சப் கலெக்டர் ஆர்டிஓ அலுவலகங்களில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!