News April 11, 2025
விருதுநகரில் குற்ற சம்பவம் குறித்து புகார் அளிக்க எண் வெளியீடு

சிவகாசி, நாரணாபுரத்தில் சிசிடிவி கேமராவுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 8,135 சிசிடிவி பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் குற்ற சம்பவம் தொடர்பாக தனது 9940277199 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும், புகார் தாரரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.
Similar News
News November 2, 2025
ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சியில் கனிமவள நிதியிலிருந்து ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையையும் MLA S.தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் ஊராக வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 2, 2025
சிவகாசி கோட்டத்தில் மின்தடை அறிவிப்பு

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வருகின்ற செவ்வாய் கிழமை (04:11:2025 ) அனுப்பன்குளம், பேராபட்டி, சுந்தராஜபுரம், மீனம்பட்டி, நாராணபுரம், செல்லியநாயக்கன்பட்டி, சின்னகாமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
News November 2, 2025
விருதுநகரில் நாளை முதல் வீடு தேடி வரும்

விருதுநகரில் வயதான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை, நாளை மறுநாள்(நவ.3,4) இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைபதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


