News June 15, 2024
விருதுநகரில் கிராஃபிக் டிசைனர் மாயம்

விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள ஹோட்டல் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் வீட்டிலிருந்து கிராஃபிக் டிசைனர் வேலை செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி மகேஸ்வரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
விருதுநகர்: 300 யூனிட் FREE மின்சாரம் பெறுவது எப்படி?

விருதுநகர் மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News March 1, 2026
ஸ்ரீவி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிமுத்து(48). கூலித்தொளி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டில் சுவரை நனைத்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து ஒயரை எடுத்த போது மின்சாரம் பாய்ந்து மீனாட்சி முத்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
ராஜபாளையம்: வீட்டின் பூட்டை உடைத்து 70கி நகை திருட்டு

ராஜபாளையம் அருகே செண்பகத்தோப்பு சாலை ராம்நகரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவா் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவர் குடும்பத்துடன் தென்காசிக்குச் சென்ற நிலையில் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 70 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இது குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


