News July 24, 2024
விருதுநகரில் ‘காபி வித் கலெக்டர்’

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜூலை 24) சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ‘காபி வித் கலெக்டர்’ என்ற 86வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் உயர் கல்வி குறித்து வழிகாட்டுதல் வழங்கினார்.
Similar News
News April 7, 2026
ராஜபாளையம்: கோவிலில் நகை திருட்டு; CCTV யில் சிக்கிய திருடன்

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 18 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்த்தியடைந்த பூசாரி CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பக்தர் கருவறையை திறந்து திருடிய காட்சி பதிவாகியிலிருந்தது. இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 7, 2026
சாத்தூர்: இளைஞர் கொலை; நீதிபதி அதிரடி உத்தரவு.!

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இக்கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.