News March 30, 2025

விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அண்மை காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை(மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஏப்.2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்.5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 1, 2025

விருதுநகர்: நிலப்பிரச்சனைகளை தீர்க்கும் கோவில்

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் திருமேனிநாதர் கோவில் உள்ளது. இங்கு திருமேனிநாதர், பூமிநாதர் இறைவனாகவும், துணைமலைநாயகி இறைவியாகவும் உள்ளனர். இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது நம்பிக்கை. அதேபோல இங்கு வழிபட்டால் முன்னோர்களின் சாபம், நிலப் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

News April 1, 2025

விருதுநகரில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப். 4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

விருதுநகரில் அக்னி சட்டி தயாரிக்கும் பணிகள் தீவிரம்

image

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று முன் தினம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. வருடந்தோறும் பங்குனி பொங்கலை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தற்பொழுது அக்னி சட்டி தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.

error: Content is protected !!