News December 15, 2025

விருதுநகரில் கத்தியால் குத்தியவருக்கு மாவுகட்டு

image

விருதுநகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கார்த்திக்குமார் 42 என்பவரை அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன், மணிகண்டன் மற்றும் மற்றொரு நபர் கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்றனர். இவ்வழக்கில் செல்வத்தை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் மாலை தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்யும் போது சுவரில் ஏறி தப்பியோட முயன்று கீழே விழுந்து கை, கால் முறிந்ததால் விருதுநகர் GH-ல் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

Similar News

News December 20, 2025

சிவகாசி அருகே உணவக உரிமையாளர் விபத்தில் பலி!

image

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் சித்தரஞ்சன் (60). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்க பைக்கில் வந்துள்ளார். சிவகாசி பஜார் பகுதியில் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 20, 2025

விருதுநகர்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

image

விருதுநகர் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <>electoralsearch.eci.gov.in <<>>இணையதளத்திற்கு சென்று வாக்காளர் எண் அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்தால் உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

விருதுநகர்: ஒரேநாளில் இரண்டு கொலைகள்

image

விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்தியசேனையில் பட்டாசு ஆலை காவலாளியாக பணியாற்றிய செல்லச்சாமியை (57) கால்நடை தீவனம் பறிக்க வந்த படுகளம் (64) என்பவர் வெட்டி கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் ராஜபாளையம் சமுசிகாபுரத்தை சேர்ந்த வேல்முருகனை (37), மது போதையில் பாலமுருகன் (24) என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.

error: Content is protected !!