News September 17, 2024
விருதுநகரில் கடந்த 8 மாதத்தில் ரூ.67 லட்சம் அபராதம்
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக 260 கடைகள் மற்றும் 29 வாகனங்களில் 1207 கிலோ 774 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 260 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 260 கடைகள் மற்றும் 29 வாகனங்களுக்கும் ரூபாய் 67 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் அளித்துள்ளது.
Similar News
News November 20, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 ஐ மீறி திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரும் புகார்களுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
ரூ.20 லட்சம் மதிப்பில் சுவாச குழாய் அகநோக்கி இயந்திரம்
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நுரையீரல் சிகிச்சை பிரிவிற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுவாசக் குழாய் அகநோக்கி இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
News November 20, 2024
திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சப் டிவிஷன் டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் பொன்னரசு திருச்சுழி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.