News July 24, 2024

விருதுநகரில் ஒரே நாளில் இரண்டு கொலைகள்

image

ஸ்ரீவி அருகே தவிர்த்தான் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ள நூலகம் அருகில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். விசாரணையில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதேபோல் ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியை சேர்ந்த ரானுவ வீரர் பொன்னுச்சாமி நேற்று இரவு மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Similar News

News March 9, 2026

விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News March 9, 2026

விருதுநகர்: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

விருதுநகர் மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 9, 2026

விருதுநகர்: குறுக்கே வந்த நாய்.. பறிபோன உயிர்

image

காரியாபட்டி அருகே கழுவனச்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கந்தன் (45). இவர் மந்திரி ஓடையில் இருந்து காரியாபட்டி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கையில் நாய் சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த கந்தன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரணை.

error: Content is protected !!