News March 26, 2025

விருதுநகரில் ஒரு அமானுஷ்ய கிராமம்

image

விருதுநகர் மாவட்டத்துல ஆளில்லாத ஒரு அமானுஷ்ய கிராமம் இருக்குன்னு சொன்னா அத நம்புவீங்களா? ஆமாங்க.. திருச்சுழி பக்கத்துல குச்சம்பட்டி அப்டிங்கிர ஒரு கிராமம். இங்க ஒரு வயதான தம்பதிய தவிர, வேற யாருமே இங்க இல்ல. ஆனா, முன்னாடி வாழ்ந்தவங்களோட வீடுகள் சிதிலமடைஞ்சு இருக்குறத பாக்க முடியும். இங்க சரியான வேலை இல்லாததால, இந்த கிராமத்த விட்டு போனதா சொல்றாங்க அந்த வயதான தம்பதி. கேக்கவே வித்தியாசமா இருக்குல.

Similar News

News November 13, 2025

கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் மானியம் பெறலாம் – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டைச் சார்ந்த கன்னியாஸ்திரிகள்/. அருட்சகோதரிகளுக்கு (ECS) முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

சிவகாசியில் கடையை உடைத்து கொள்ளை

image

சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீபன்ராஜ் (29). இவர் செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்தநிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது விலை உயர்ந்த இரு செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 12, 2025

சிவகாசியில் சிறுமி கர்ப்பம்; மூவர் மீது வழக்கு

image

திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், தனுஷ், முனீஸ் ஆகிய மூவரிடமும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முனீஸ் என்ற இளைஞர் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து மதுபோதையில் இருந்த சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமான நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் இளைஞர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

error: Content is protected !!