News January 6, 2025

விருதுநகரில் அதிக வாக்காளர்களை கொண்ட சிவகாசி தொகுதி 

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இந்நிலையில் 7 சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக சிவகாசி தொகுதி அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. 1,17,414 ஆண் வாக்காளர்களும், 1,23,034 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,40,475 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Similar News

News January 31, 2026

விருதுநகர் அருகே கஞ்சா வழக்கில் சிக்கிய 17 வயது சிறுவன்

image

ஸ்ரீவி.நகர் காவல் நிலைய எஸ்.ஐ மாணிக்கம் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்த போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், சிறுவனை கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

News January 30, 2026

ஆட்சியர் தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜன.30) மாவட்ட அளவிலான ஓய்வூதிய தாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் ஏழு மனுக்கள் தரப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்தார்.

News January 30, 2026

விருதுநகர்: நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், ஜி.என்.பட்டி, துலுக்கப்பட்டி, பெரியவள்ளிக்குளம், முடங்கியார், சிவகாசி இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இத்துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!