News April 22, 2025

விருதாச்சலம் அருகே கால்வாயில் விழுந்து குடிமகன் உயிரிழப்பு 

image

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40)  என்பவர் நேற்று குடிபோதையில் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி தலைகுப்புற விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கால்வாயில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News October 16, 2025

கடலூர் மாவட்டத்தில் 15 பேர் கைது!

image

கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில், ‘ தீபாவளி பண்டிகையையொட்டி பழைய குற்றவாளிகள் 137 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் 15 பேரை கைது செய்துள்ளோம். இது தவிர மாவட்டம் முழுவதும் பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, அதில் 65 கிராமங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

News October 16, 2025

கடலூர்: ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST- 40, OBC-38)
6 .ஆரம்ப தேதி: 21.10.2025
7. கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

கடலூர்: ரூ.1 லட்சம் பிடுங்கிய போலீஸ் சஸ்பெண்ட்!

image

நெய்வேலி நகர காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றிவர் பூவரராகவன். இவர் நெய்வேலி பகுதியில் புகைப் பிடித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில் புகாரை தொடர்ந்து கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் காவலர் பூவராகவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!