News April 13, 2024

விராட் கோலிக்கு மெழுகு சிலை

image

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 18 அன்று இந்திய வீரர் விராட் கோலியின் மெழுகு சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் நஹர்கார் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. கோலியின் சிலையை நிறுவ வேண்டுமென குழந்தைகளும், இளைஞர்களும் வேண்டுகோள் விடுத்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலையானது உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிடையே கிரிக்கெட்டின் அடையாளமாக விராட் கோலி விளங்குகிறார்.

Similar News

News April 27, 2025

நடிகையா, சச்சின் மகளா? கில் கொடுத்த விளக்கம்

image

கடந்த 3 ஆண்டுகளாகவே சிங்கிளாக இருப்பதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சந்தித்தே இருக்காத பெண்களுடன் கூட தன்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவதாகவும், தன்னுடைய முழுக்கவனமும் தற்போது கிரிக்கெட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சச்சின் மகள் சாரா மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோருடன் கில் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் பரவின.

News April 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 319 ▶குறள்: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். ▶பொருள்: அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

News April 27, 2025

அவர் என்னை ஏமாற்றுகிறார்: டிரம்ப்

image

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கின் போது அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்தனர். பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில், ரஷ்ய அதிபர் புடினுக்கு போரை நிறுத்த மனமில்லை என சாடியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக புடின் தன்னை ஏமாற்றி வருவதாகவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனிய பொது இடங்களில் குண்டு வீசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!