News May 1, 2024
வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை, பஸ் ஸ்டாண்ட் வணிக நிறுவனங்கள் கோவில் பள்ளியில் என மக்கள் நெரிசல் மிகுந்த பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மே 5ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றால் 18ஆம் தேதி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
குண்டடத்தில் மாயமான பெண் பிணமாக மீட்பு

குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
விசாலாட்சி (62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார். குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் அப்போது உப்பாறு அணையில் விசாலாட்சியை பிணமாக மீட்டனர்
News April 19, 2025
வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 19, 2025
திருப்பூர்: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0421-2971117. ▶️திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி ஆணையர் (கலால்) 0421-2971103. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️உதவித் திட்ட அலுவலர் (வீடுகள்&சுகாதாரம்) 0421-2971177. இதை SHARE பண்ணுங்க.