News December 18, 2025

விமான பயணிகளுக்கு அலர்ட் கொடுத்த ஏர் இந்தியா

image

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பயணிகள் ஏர்போர்ட்டுக்கு புறப்படும் முன் விமான சேவை நிலையை இணையளத்தில் சரிபார்த்துக்கொள்ள, ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பயணம் ரத்தானால் பயணிகள் தங்கள் விமானப் பயணங்களை மாற்றலாம் அல்லது அபராதம் இல்லாமல் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 29, 2025

தவெகவில் மற்றொரு அதிமுக தலைவர் இணைந்தார்

image

பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், நேற்று Ex MLA சி.கிருஷ்ணன் அக்கட்சியில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது மற்றொரு அதிமுக Ex MLA மரியமுல் ஆசியா செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பொங்கலுக்கு முன் இன்னும் பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என KAS கூறியுள்ளார்.

News December 29, 2025

BSNL அதிரடி ஆஃபர்.. அதிகரித்த டேட்டா!

image

வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வரும் BSNL நிறுவனம், முக்கியமான ரீசார்ஜ் பிளானில் டேட்டாவை அதிகரித்துள்ளது. ₹225-க்கு ரீசார்ஜ் செய்தால் 1 மாதத்திற்கு தினமும் 2.5GB டேட்டா சேவையை பெறலாம். தற்போது, அது தினமும் 3GB ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே சேவையை பிற நெட்வொர்க்குகளில் பெற ₹400 வரை செலவிட வேண்டும். இந்த ஆஃபர் ஜன.31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!

News December 29, 2025

2025 REWIND: இந்தியாவின் டாப் 5 ODI விக்கெட் ராணிகள்!

image

இந்திய மகளிர் அணி, WC-யை வென்று வரலாற்று சாதனையை 2025-ல் படைத்தது. மொத்தமாக விளையாடிய 23 போட்டிகளில் 15-ல் வெற்றி பெற, இந்திய அணி வீராங்கனைகளின் அபாரமான பவுலிங்கும் முக்கிய காரணமாகும். 2025 ODI-ல் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை விளாசிய வீராங்கனைகளின் லிஸ்ட்டை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களை யாருடைய பவுலிங் மிகவும் கவர்ந்தது?

error: Content is protected !!