News October 10, 2024

விமான நிலைய ஊழியர்கள் மறியல் போராட்டம்

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செய்கின்றனர். இவர்களுக்கு இணையாக ஊழியர்களும் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்லும் வாகனங்களுக்கு வாகனங்களுக்கு சுங்கவரி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது. ஊழியர்கள் வரும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிப்பதை கண்டித்து விமான நிலைய ஊழியர்கள் இருசக்கர வாகனங்களுடன் சுங்க சாவடியை மறித்து மறியல் போராட்டம்.

Similar News

News August 18, 2025

திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும், புங்கனூர் அருகே கஞ்சா வைத்திருந்த குணப்பிரகாசம், ராம்ஜி நகரில் கஞ்சா வைத்திருந்த ரமணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இம்மூவரின் தொடர்பு குற்ற நடவடிக்கைகளை தடுக்க. இவர்களை குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி உத்தரவிட்டார்.

News August 17, 2025

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

image

திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த ஆக.15ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சேலத்தை சேர்ந்த லட்சுமணன்(20) என்பவர் சுற்றித்திரிந்தார், அப்போது அரை மீட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள காப்பகத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.17) லட்சுமணனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களை நேரில் வரவழைத்த ரயில்வே போலீசார், லட்சுமணனை ஒப்படைத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

News August 17, 2025

திருச்சி: டிகிரி போதும்… LIC நிறுவனத்தில் வேலை!

image

திருச்சி மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே<> கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!