News December 25, 2024
விமான நிலையத்தில் 8,000 ஆஸ்திரேலிய டாலர்கள் பறிமுதல்

உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று கொழும்பு செல்லவிருந்த பயணி ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமையில் 4.36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8,000 ஆஸ்திரேலிய டாலர் வெளிநாட்டு பணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
திருச்சி: 81 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ’81’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 15, 2025
திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.31-ம் தேதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் திருச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW !!
News August 15, 2025
திருச்சி: தேவாலயங்களை புனரமைக்க மானியம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பீடம் கட்டுதல், குடிநீர், கழிவறை வசதிகள், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு மானியம் வழங்க உள்ளது. இதற்கு தகுதியான தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.