News December 13, 2025
விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க அரசு மறுப்பு

<<18488484>>விமான டிக்கெட்<<>> கட்டணங்களுக்கு உச்சவரம்பை நிர்ணயிக்க முடியாது என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய அவர், பண்டிகை உள்ளிட்ட சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே டிக்கெட் கட்டணம் உயரும். இது தற்காலிகமானது தான். கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால் தான் பல நிறுவனங்கள் உள்ளே வரும். அதனால் போட்டி அதிகரித்து மக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்திய – தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி இன்று அகமதபாத்தில் நடைபெற உள்ளது. 2-1 என முன்னிலை வகிக்கும் இந்தியா இன்று வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம். கடந்த போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்தானதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தெ.ஆப்பிரிக்கா தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
News December 19, 2025
ராஜ்யசபாவிலும் ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்

<<18603421>>MGNREGA <<>>திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு அறிவித்த விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்திற்கான மசோதா லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக இரவு வரை விவாதம் நடந்த நிலையில், கடைசியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. இந்த வாக்கெடுப்புக்கு அதிமுக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக நள்ளிரவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
News December 19, 2025
வரலாற்றில் இன்று

*1934 – இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பிறந்தநாள்.
*1941 – ஹிட்லர் தன்னை ஜெர்மனியின் ராணுவத் தலைவராகத் அறிவித்தார்.
*1946 – முதலாவது இந்தோனேசியப் போர் ஆரம்பமானது.
*1961 – டையூ & டாமனை இந்தியா இணைத்துக் கொண்டது.
*1961 – கோவா விடுதலை நாள்.
*1974 – முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் பிறந்தநாள்.


