News January 20, 2026

விமான கட்டணம் உயர்வு: நோட்டீஸ் அனுப்பிய SC

image

பண்டிகைக் காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி பயணிகளைச் சுரண்டுவதாக SC கருத்து தெரிவித்துள்ளது. தனியார் விமான நிறுவனங்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த கட்டண உயர்வு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் DGCA-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Similar News

News February 3, 2026

FLASH: மீண்டும் உயர்வை கண்ட பங்குச்சந்தை

image

பட்ஜெட்டையொட்டி பிப்.1-ல் பெரும் சரிவை கண்ட பங்குச் சந்தை இன்று 2-வது நாளாக மீண்டும் உயர்வை கண்டுள்ளது. சென்செக்ஸ் 2,266 புள்ளிகள் உயர்ந்து 83,926 புள்ளிகளிலும், நிஃப்டி 701 புள்ளிகள் உயர்ந்து 25,779 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் HDFC Bank, Reliance, ICICI Bank, Eternal உள்ளிட்டவைகளின் பங்குகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.

News February 3, 2026

திமுக ரகசியமாக வேலையை தொடங்கியது

image

2026 தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியை திமுக தொடங்கியுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் வெளியில் கசியக்கூடாது என நினைக்கும் ஸ்டாலின், வியூக வகுப்பாளர்கள், மா.செ.,க்கள், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளிடம், பரிந்துரை பட்டியல்களை பெற்றுள்ளாராம். இதில், வெற்றி வாய்ப்பு, சாதி, களப்பணி, பொருளாதாரம், விசுவாசம் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

News February 3, 2026

படுத்த படுக்கையாகிவிட்டேன்: நடிகர் அரவிந்த்சாமி

image

90-களில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த்சாமி, திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் படுத்த படுக்கையாக இருந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். 2005-ம் ஆண்டு நடந்த விபத்து தன்னை ஒன்றரை வருடம் முடக்கிவிட்டதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்ததால், அந்த வலி நீண்ட நாள் தொடர்ந்ததாகவும், பிறகு ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாகவும் கூறினார்.

error: Content is protected !!