News August 7, 2024
விமானத்தில் கடத்தி வந்த அகர் மரக்கட்டை பறிமுதல்

கொழும்புவில் இருந்து சென்னை வந்த இரண்டு பயணிகள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 6 பண்டல்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அகர் மரக்கட்டையும் , 10-க்கும் மேற்பட்ட பாட்டில்களில் 3 லிட்டர் அகர் எண்ணெய்யும் கடத்தி வந்தது தெரிந்தது. இந்தியாவில் அழிந்து வரும் பட்டியலில் அகர் மரம் இருப்பதால், இறக்குமதிக்கும் தடை உள்ளது.
Similar News
News September 19, 2025
சென்னை: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 19, 2025
சென்னையில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்திற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்களைக் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News September 19, 2025
சென்னை: மழையை எதிர்கொள்ள தயார்- கே.என்.நேரு

மயிலாப்பூரில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பல இடங்களில் திட்டமிட்டபடி மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தண்ணீர் தேங்கும் இடங்களில் வேறொரு திட்டம் மூலம் மழை நீர் வடிக்கால்வாய் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவடையும் என கூறினார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.